இந்தியாவில் 87.6 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன; மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் 87.6 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-28 16:04 GMT
புதுடெல்லி,

இந்தியாவில்  கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி  செலுத்தும் பணி கடந்த ஜனவரி  16 ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி  2 ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. 

பின்னர் படிப்படியாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரிவு படுத்தப்பட்டு மே 1 ஆம் தேதி முதல் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனாவை வெல்ல பேராயுதமாக தடுப்பூசி கருதப்படுவதால்  தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில், இந்தியாவில்   இதுவரை 87.61 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, இன்று மாலை  7 மணி நிலவரப்படி  49,45,169 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட்டுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 87,61,89,412 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்