ஜம்மு காஷ்மீரில் மேலும் 95 பேருக்கு கொரோனா

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-28 16:24 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் மேலும் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 220- ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் விதமாக தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. 

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,422- ஆக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,420- ஆக உள்ளது.  தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 23 ஆயிரத்து 378- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்