கர்நாடகத்தில் மத மாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்படும் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் மத மாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-28 20:25 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் மத மாற்றம் தடை சட்டத்தை கொண்டுவர பா.ஜனதா அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் கலபுரகி மாவட்டம் படரஹள்ளியில் நடந்த மத மாற்றம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள், கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மத மாற்றம் நடைபெறுவதை தடுக்க சட்டம் கொண்டு வருவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதாவது கட்டாயத்தின் பேரிலோ அல்லது ஆசைகளை தூண்டியோ மத மாற்றம் செய்வது நடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதமாற்றம் சட்ட விரோதம் என்பதால் அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்