மாநிலங்களின் கையிருப்பில் 6.93 கோடி கொரோனா தடுப்பூசிகள்

மாநிலங்களின் கையிருப்பில் 6.93 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Update: 2021-10-06 09:11 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகளை அவசரகால தேவைக்கு பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.  கொரோனா 2வது அலைக்கு பின் மக்களிடையே தடுப்பூசி போட்டு கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

இந்தநிலையில்,  இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 92,57,51,325 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 6,93,46,080 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 92 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்