சிங்கு எல்லை நடந்த கொலை: 2 சிறப்பு விசாரணை குழுக்கள் அமைப்பு

சிங்கு எல்லையில் நடந்த கொலையில் விசாரணை நடத்துவதற்கு 2 சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-17 20:34 GMT
கோப்புப்படம்
சண்டிகார், 

டெல்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிற சிங்கு எல்லைப்பகுதியில் உள்ள சோனிப்பட்டில் லக்பீர் சிங் என்ற தலித் தொழிலாளி கடந்த சில தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். அவரது கைகளில் ஒன்று துண்டிக்கப்பட்டிருந்ததும், உடல் உலோக தடுப்பு வேலியில் கட்டப்பட்டிருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த படுகொலையில் விசாரணை நடத்துவதற்கு அரியானா போலீஸ், 2 சிறப்பு விசாரணை குழுக்களை அமைத்துள்ளது. இந்த கொலையில் சீக்கிய மதத்தின் நிஹாங் பிரிவைச் சேர்ந்த நாராயண் சிங் நேற்று முன்தினம் அமிர்தசரஸ் அருகே கைது செய்யப்பட்டார்.

அதே சீக்கிய மதப்பிரிவை சேர்ந்த கோவிந்த்பிரீத் சிங், பக்வந்த் சிங் ஆகிய இருவரும் போலீசில் சரண் அடைந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் சோனிப்பட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்