கர்நாடகத்தில் நேற்று 380 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

கர்நாடகத்தில் 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-17 23:05 GMT
பெங்களூரு,

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு நேற்று 78 ஆயிரத்து 742 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 லட்சத்து 83 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் ஒருவரும், மைசூருவில் 2 பேரும், தார்வாரில் ஒருவரும் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதே சமயம் 27 மாவட்டங்களில் கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 380 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 36 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்