உத்தரகாண்ட் கனமழை - பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு

உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2021-10-19 19:15 GMT
டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த நேற்றுமுன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, அம்மாநிலத்தின் குமன் மாகாண பகுதிக்கு உள்பட்ட நைனிதா, சம்பவாட், அல்மொரா, பிதோரகர்க், உதம்சிங் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவால் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. 

இந்நிலையில், உத்தரகாண்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலசரிவில் 34 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

அதன்படி, உத்தரகாண்ட் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

அதேபோல், உத்தரபிரதேச மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் செய்திகள்