"ஸ்மார்ட்போன் வாங்க" புது மனைவியை 55 வயது நபருக்கு விற்பனை செய்த சிறுவன்

ஒடிசா மாநிலம் ராய்ப்பூர் பாலங்கீரியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு கடந்த ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.

Update: 2021-10-23 12:37 GMT
Image Source: Pixabay/Representative Image
போபால் 

ஒடிசா மாநிலம் ராய்ப்பூர் பாலங்கீரியை சேர்ந்தவர்  17 வயது சிறுவன் இவருக்கு  கடந்த ஜூலை மாதம்  அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.

ஆகஸ்ட் மாதம் தம்பதியினர் ராய்பூர் மற்றும் ஜான்சி வழியாக ராஜஸ்தானுக்கு செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர்.  அங்கு  சில நாட்களில், 17 வயதான சிறுவன் தனது மனைவியை ரூ.1.8 லட்சத்திற்கு பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது முதியவருக்கு   விற்பனை செய்து உள்ளார்.  மனைவியை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து உள்ளார். பிறகு  ஒரு ஸ்மார்ட் போனும் வாங்கி உள்ளார். பின்னர் அவர் தனது சொந்த ஊர் திரும்பி உள்ளார். 

ஊர் திரும்பியவரிடம்  மனைவியை எங்கே என குடும்பத்தினர்  கேட்டபோது, அவர்   தன்னை விட்டு விட்டு  ஓடி விட்டதாக கூறி உள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.  போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மனைவியை விற்றது தெரியவந்தது. 

பாலங்கீரிலிருந்து ராஜஸ்தானுக்கு அந்த சிறுமியை  கண்டுபிடிக்க போலீஸ்  குழு அனுப்பப்பட்டது.  சிறுமியை மீட்க குழுவுக்கு நிறைய சிரமங்கள் ஏற்பட்டது.  ஏனெனில் உள்ளூர் கிராமவாசிகள்  பணம் கொடுத்ததாக கூறி  சிறுமியை போலீஸ் குழுவினரை அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. 

ஒரு வழியாக  போலீசார் சிறுமியை மீட்டனர். 17 வயதான சிறுவன் நேற்று  சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு  அனுப்பப்பட்டார்.

மேலும் செய்திகள்