சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு- காங்கிரஸ் கண்டனம்

சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-15 11:02 GMT
புதுடில்லி, 

மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக இருந்தது. இந்த இரு அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்க வகை செய்யும் அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்த நிலையில், சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்ததாவது,-  

அதிகாரத்தை கைப்பற்ற  மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்க தனது விஸ்வாசிகளை  மோடி அரசு பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கப் பிரிவும், சிபிஐ அமைப்பும் சோதனை நடத்துவதை விதியாக வைத்துள்ளன.

இயல்பாகவே ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படும். இப்போது நேரடியாகவே 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்