உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு; மீண்டும் பாஜக ஆட்சி..!

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை கைபற்றலாம் என கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

Update: 2021-11-17 11:14 GMT
லக்னோ

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு  சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பா.ஜ.க 312 இடங்களில் வென்று சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. 

இந்த நிலையில், 2022-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெறப்போகும் இடங்கள் குறித்து டைம்ஸ் நவ் மற்றும் போல்ஸ்ட்ரட் நிறுவனம் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளன். 

மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பா.ஜ.க மீண்டும்  ஆட்சியை தொடர பெரும்பாலான மக்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜ.க 239 முதல் 245 இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2017 -தேர்தலில் பா.ஜ.க 312 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் கடந்தமுறை 47 இடங்களில் வென்றிருந்த சமாஜ்வாதி கட்சி இந்த முறை 119 முதல் 125 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 28 முதல் 32 இடங்களும், காங்கிரஸ் கட்சி 5 முதல் 8 இடங்களிலும் வெற்றிப்பெறும் எனக் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்