சமூக சமையலறை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி: மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்

சமூக சமையலறை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தியை சுட்டிக்காட்டி மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2021-11-17 22:28 GMT
புதுடெல்லி,

பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் நிகழும் இறப்புகளை தவிர்ப்பதற்கு சமூக சமையலறை அமைக்கக்கோரும் பொதுநல மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இதில் மத்திய அரசு அளித்த பதிலுக்கு நீதிபதிகள் நேற்று முன்தினம் அதிருப்தி வெளியிட்டனர்.

அப்போது, பசியால் இறக்கும் மக்களுக்கு உணவு வழங்குவதே ஒரு பொதுநல அரசின் முதல் பொறுப்பு எனக்கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக 3 வாரங்களுக்குள் மாநிலங்களுடன் ஆலோசனை நடத்துமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர்.

இதை சுட்டிக்காட்டி மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்தை தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், ‘உங்கள் நண்பர்களுக்காக மேலும் சொத்துகளை உருவாக்காதீர்கள், மக்களுக்காக சரியான கொள்கைகளை உருவாக்குங்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்