இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 114.46 கோடி

இந்தியாவில் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 114.46 கோடியாக உயர்ந்து உள்ளது.

Update: 2021-11-18 10:39 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.  இந்த நிலையில், கடந்த 2 நாட்களில் நேற்றும், இன்றும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 ஆயிரத்து 919 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,78,517 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 470 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,64,623 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 73 லட்சத்து 44 ஆயிரத்து 739 கொரோனா தடுப்பூசி  டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.  இதனால், மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கையானது 114 கோடியே 46 லட்சத்து 32 ஆயிரத்து 851 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்