விவசாயிகளின் குடும்பத்துக்கு, தலா ரூ.1 கோடி இழப்பீடு - பிரதமருக்கு வருண் காந்தி கடிதம்

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு, தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி. வருண் காந்தி எழுதி உள்ளார்.

Update: 2021-11-20 08:36 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி.  வருண் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

அதில், மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெறும் அறிவிப்பை வரவேற்கிறேன். நமது விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு அவர்களது வீடுகளுக்குச் செல்லும் வகையில், MSP எம்.எஸ்.பி மற்றும் விவசாயிகளின் இதர பிரச்சினைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கோருகிறேன்.

போராட்டத்தின் போது 700 விவசாயிகள் இறந்ததாக பிரதமருக்கு வருண் காந்தி கடிதம் எழுதியுள்ளார். 

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான முடிவு விரைவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இறந்தவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். 

லகிம்பூர் வன்முறைக் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வருண் காந்தி என கூறினார்.

ஏற்கனவே விவசாயிகள் இயக்கத்திற்கு வருண் காந்தி ஆதரவு அளித்து வருகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக பலமுறை அறிக்கைகள் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்