டெல்லி அரசின் இலவச ஆன்மிக சுற்றுலாவில் வேளாங்கண்ணி தேவாலயம் சேர்ப்பு..!

டெல்லி அரசின் இலவச ஆன்மிக சுற்றுலாவில் வேளாங்கண்ணி தேவாலயம் சேர்க்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-24 22:58 GMT
புதுடெல்லி, 

டெல்லி அரசு, மூத்த குடிமக்களுக்கான இலவச ஆன்மிக சுற்றுலா திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது. இதன்படி, டெல்லியில் வசிக்கும் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள், பூரி, ராமேஸ்வரம், சீரடி, மதுரா, ஹரித்துவார், திருப்பதி உள்ளிட்ட 13 ஆன்மிக தலங்களுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகிறார்கள்.

கொரோனா காரணமாக இந்த சுற்றுலா திட்டம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், வருகிற 3-ந் தேதி மீண்டும் தொடங்குகிறது. அன்று, ஆயிரம் மூத்த குடிமக்களுடன் முதல் ரெயில் அயோத்திக்கு புறப்படுகிறது.

இந்த சுற்றுலா திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயமும் சேர்க்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். கிறிஸ்தவ சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும் செய்திகள்