காலனித்துவ மனநிலை-வளர்ந்த நாடுகள் மீது பிரதமர் மோடி காட்டம்

வளரும் நாடுகளின் வளர்ச்சி பயணத்தில் காலனித்துவ மனநிலையுடன் தடைகள் போடப்படுவதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.

Update: 2021-11-26 14:44 GMT
புதுடெல்லி,

அரசியல் அமைப்பு தினம் இன்று  கடைபிடிக்கப்படுகிறது. அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு  பிரதமர் மோடி பேசியதாவது: - “ தற்போது எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டிடம் நேரடியாக காலனி ஆதிக்கத்தின் கீழ் இல்லை. ஆனால், அதற்காக காலனித்துவ மனநிலை இல்லை என்று சொல்லிவிட முடியாது.

காலனித்துவ மனநிலை பல பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. வளரும் நாடுகளின் வளர்ச்சி பயணத்தில் போடப்படும் தடைகளில் இதற்கான தெளிவான உதாரணத்தை நாம் காணலாம். வளர்ந்த நாடுகள் தாங்கள் வளர்வதற்காக  உருவாக்கப்பட்ட பாதைகள், வளரும் நாடுகளுக்கு மூடப்படுகிறது. வளர்ந்த நாடுகளே கார்பன் வெளியேற்றத்தில் அதிக பங்களிப்பை செய்துள்ளன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய  நாடுகளில்  தனிநபர் உமிழ்வு (கார்பன் வெளியேற்றம்)  11 மடங்கு அதிகமாக உள்ளது. 

இந்த நோக்கத்திற்காக  சுற்றுச்சூழல் பிரச்சினையும் அபகரிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் இதற்கான உதாரணத்தை நாம் பார்க்கலாம்.  இந்தியா 1850- முதல் இன்றைய தேதி வரை வெளியிட்ட கார்பன் வெளியேற்றத்தை விட 15 மடங்கு அதிகமாக வளர்ந்த நாடுகள் கார்பனை வெளியேற்றியுள்ளன”என்றார். 

மேலும் செய்திகள்