ஜம்மு காஷ்மீர்: 1300 ஆண்டுகள் பழமையான துர்காதேவி சிலை மீட்பு

ஜம்மு காஷ்மீரில் 1300 ஆண்டுகள் பழமையான துர்காதேவி சிலை மீட்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-30 16:30 GMT
ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள காக் பகுதியில் இருந்து துர்கா தேவியின் பழங்கால சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தொல்லியில் துறையினர் சிற்பத்தை ஆய்வு செய்தபோது, அது தோராயமாக 1300 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்தது. சிம்ம சிம்மாசனத்தில் துர்கா தேவி அமர்ந்த நிலையில் கருங்கல்லில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இடது கையின் சில பகுதி காணவில்லை. 

மீட்கப்பட்ட சிற்பத்தை ஆவணக் காப்பகங்கள், தொல்லியல் துறையின் துணை இயக்குநர் முஷ்டாக் அகமது மற்றும் அவரது குழுவினரிடம் தாஹிர் சலீம் கான், எஸ்எஸ்பி புத்காம் ஆகியோர் முறைப்படி ஒப்படைத்தனர்.

2021-ஆம் ஆண்டில் காஷ்மீரில் மீட்கப்பட்ட துர்கா தேவியின் இரண்டாவது சிற்பம் இதுவாகும். ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீர் போலீசார் 1,200 ஆண்டுகள் பழமையான துர்கா தேவியின் சிற்பத்தை மீட்டனர். ஸ்ரீநகரின் பந்த்ரேதன் பகுதியில் உள்ள ஜெலம் ஆற்றில் இருந்து மணல் எடுக்கும் போது தொழிலாளர்கள் மூலம் அந்த சிற்பம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்