இன்னும் 2 மாதங்களில் ஒமைக்ரான் உச்சம் தொடும்... எச்சரிக்கை!

இதுகுறித்து பயப்படத் தேவையில்லை, நோயின் தீவிரம் குறைவாகவே இருக்கும்

Update: 2021-12-15 10:02 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் ஒமைக்ரான் தொற்று உச்சமடையும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை, நோயின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
டெல்டா வகை வைரசை விட ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடிய தன்மையுடையது என்பதால் அதிகமானோர் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

இதுகுறித்து நடந்த மாதிரி ஆய்வுகளில், பெரும்பாலானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டாலும், நோயினால் தீவிர உடல்நலக் குறைபாடு ஏற்படாது. ஒமைக்ரான் பரவும் வேகம் தான் அதிகமே தவிர, பயப்படத் தேவையில்லை

உலகளவில் இதுவரை 77 நாடுகள் தான் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதுமே ஒமைக்ரான் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

“ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் தான் தேவை.டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் மிகவும் அபாயகரமானதாக இன்றளவும் கருதப்படுகிறது.ஒமைக்ரானால், டெல்டா வகை பாதிப்பை போல மருத்துவம் மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு கடும் அழுத்தம் ஏற்படாது. 

இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதை அதிகரிப்பதே முதல் நோக்கமாக உள்ளது. அதன்மூலம், வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களை தீவிர நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.” இவ்வாறு அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்