"சில முடிவுகள் தவறாக இருக்கலாம் ஆனால் எங்கள் நோக்கம் தவறாக இருந்தது இல்லை" - அமித்ஷா பேச்சு

கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-17 10:08 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சில முடிவுகள் தவறாக இருந்திருக்கலாம் ஆனால் மத்திய அரசின் நோக்கம் குறித்து எந்த கேள்வியும் எழுப்ப முடியாது என்று மத்திய உள்துறை மந்திரி  அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின்  (FICCI) 94 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை மந்திரி  அமித்ஷா 
பேசியதாவது :

எங்கள் அரசின் தலைமையின் கீழ் சில தவறான முடிவுகள் இருந்திருக்கலாம், ஆனால் எங்கள் நோக்கம் என்றுமே தவறாக இருந்தது இல்லை.கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை. இது  அரசாங்கத்தின் நோக்கம் எப்போதும் சரியாக இருந்ததை காட்டுகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளில் நாடு நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளது என்பதை விமர்சகர்கள் கூட ஒப்புக்கொள்வார்கள். கொரோனா தொற்றுநோய்யின் போது கூட அரசாங்கம் பல கொள்கை முடிவுகளை எடுத்தது. இது நாட்டின்  வளர்ச்சியில் நீண்டகால நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எங்கள் தலைமையின் கீழ் நமது நாட்டின்  பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அந்த அளவுக்கு நாம் மாற்றகளை கண்டுவருகிறோம்.

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்