மாநிலங்களவையில் தாக்கல் ஆகிறது பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா...

பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா நடப்பு கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

Update: 2021-12-17 21:55 GMT
புதுடெல்லி, 

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. 

இதையடுத்து, இதற்காக குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா, நடப்பு கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இத்தகவலை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி முரளீதரன் நேற்று மாநிலங்களவையில் கூறினார். அம்மசோதா, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார். 

இதுபோல், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான மசோதாவும், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்