கேள்வித்தாள் வெளியானதால் குஜராத்தில் அரசு வேலை தேர்வு ரத்து : முக்கிய குற்றவாளி கைது

குஜராத் மாநில அரசு சார்பில், தலைமை எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது

Update: 2021-12-21 22:31 GMT

ஆமதாபாத், 

குஜராத் மாநில அரசு சார்பில், தலைமை எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. மொத்தம் 88 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதினர்.

இந்நிலையில், தேர்வுக்கு முன்பே அதன் வினாத்தாள் வெளியாகிவிட்டதாக புகார் எழுந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் புகார் உண்மை என தெரியவந்ததை அடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயேஷ் படேல் என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கேள்வித்தாளை பெற்று தேர்வு எழுதிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைதாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்