டெல்லி: கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக ரூ. 1 கோடிக்கும் மேல் அபராதம்..!
டெல்லியில் நேற்று கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக ரூ. 1 கோடிக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.;
டெல்லி,
ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் நேற்று ஒருநாள் மட்டும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி அரசு அமலாக்கத்துறை கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத ஏறக்குறைய 5 ஆயிரத்து 66 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1,00,15,300 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 45 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்ச வழக்குகள் வடக்கு டெல்லியிலும் (735) மத்திய டெல்லியிலும் (647) பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு (ஜனவரி 1) அன்று ஏறக்குறைய 99 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டெல்லியில் 3194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.