ஜம்மு- காஷ்மீரில் மிக கனமழை, பனிப்பொழிவிற்கான ‘ரெட் அலர்ட்’

ஜம்மு-காஷ்மீரில் மிக கனமழை மற்றும் பனிப்பொழிவிற்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வாளர் இன்று அறிவித்தார்.

Update: 2022-01-08 05:30 GMT
கோப்புப்படம்
ஜம்மு- காஷ்மீர்,

காஷ்மீரின் பெரும்பாலான இடங்களிலும், ஜம்முவின் மலைப்பகுதிகளிலும் பனிப்பொழிவும், மழையும் பெய்து வருகிறது. 

ஜம்மு- காஷ்மீரில் மிக கனமழை, பனிப்பொழிவிற்கான ‘ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வாளர் இன்று வெளியிட்டார். 
அதாவது இன்று இரவும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை மற்றும் பனிப்பொழிவின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பள்ளத்தாக்கு பகுதிகள் மற்றும் குல்மார்க், பகல்காம், சோன்மார்க், காஷ்மீரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. 

குல்மார்க் மற்றும் வடக்கு காஷ்மீரின் மேல் பகுதிகளிலுள்ள சாலைகளில் மூன்று அடிக்கு மேல் பனி காணப்பட்டதால்,  ஸ்ரீநகர்-குரேஸ், குப்வாரா-தங்தார் மற்றும் ஸ்ரீநகர்-லே ஆகிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் குவிந்திருக்கும் பனியை ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

மேலும் செய்திகள்