இந்தியாவின் வளர்ச்சியை இளைஞர்கள் முன்னெடுத்து செல்கின்றனர்: பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றி அடைந்ததில் இளைஞர்களின் பங்கை பல்வேறு மட்டத்தில் நாம் கண்டோம் என பிரதமர் மோடி பேசினார்.

Update: 2022-01-12 10:20 GMT
புதுடெல்லி,

புதுச்சேரி 25வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து காமராஜர் மணிமண்டபத்தையும் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:

இந்தியாவில் எல்லையில்லா இரண்டு சக்திகள் உள்ளன. ஒன்று மக்கள் தொகை, மற்றொன்று இளைஞர்கள். ஜனநாயக மாண்பை நமது இளைஞர்கள் முன்னெடுத்து செல்கின்றனர். நமது நாட்டின் வளர்ச்சிக்கான காரணிகளாக இளைஞர்கள் உள்ளனர்.  கொரோனாவை கட்டுப்படுத்த அதிகமான இளைஞர்கள் குறைவான காலத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும், தற்போது வரை 15 முதல் 18 வயதுள்ள சிறுவர்கள் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இந்திய இளைஞர்களால் எதை வேண்டுமானாலும் செய்து முடிக்க முடியும் என்பதற்கு இது சான்று.  15-18 வயது சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் வேகம் இளைஞர்களின் பொறுப்புணர்வை காட்டுகிறது.  கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றி அடைந்ததில் இளைஞர்களின் பங்கை பல்வேறு மட்டத்தில் நாம் கண்டோம்.  நாட்டின் பிரகாசமான எதிர்காலம் குறித்த எனது நம்பிக்கை இளைஞர்களின் பொறுப்புணர்வால் மேலும் வலுப்பெற்றுள்ளது மகனும் மகளும் சமம் என்பதை நாம் அறிவோம்.

இந்த சிந்தனையில்தான், மகள்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த முடிவு செய்தோம்.  இதுபோன்ற முயற்சிகளால் இளைஞர்களின் வளர்ச்சியானது ஒவ்வொரு நிலையிலும் கண்கூடாக பார்க்க முடிகிறது” என்றார். 

மேலும் செய்திகள்