தொழில் முனைவோர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்...!

சிறு, குறு தொழில் முனைவோர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாட உள்ளார்.

Update: 2022-01-15 03:25 GMT
புதுடெல்லி,

புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக 2015-ம் ஆண்டு ஸ்டார்ட் அப் இந்தியா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் புதிய சிறு, குறு தொழில் முனைவோர்கள் உருவாகி வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் புதிதாக உருவாகியுள்ள சிறு, குறு தொழில் முனைவோர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். 

150-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். சிறு, குறு நிறுவனங்களில் உற்பத்தையை உலக அளவில் சந்தைப்படுத்துதல், எதிர்கால தொழில்நுட்பம், உற்பத்தி துறையில் வெற்றியாளர்களை உருவாக்குதல், நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளது. 

தொழில் முனைவோர்கள் தங்கள் யோசனைகள், திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் கலந்துரையாட உள்ளனர்.

மேலும் செய்திகள்