குஜராத்தில் கனமழை எச்சரிக்கை மீன் பிடிக்க சென்ற 800 படகுகள் கரைக்கு திரும்பின

குஜராத்தில் இன்னும் 3 நாட்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2022-01-24 00:23 GMT
சில்வாசா, 

குஜராத்தில் இன்னும் 3 நாட்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதன் காரணமாக வல்சாட் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பும்படியும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தநிலையில் வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் கரையோர பகுதிகளான ஜாகோ துறைமுகம், வாபி அருகே உள்ள ஹிபா துறைமுகத்தில் மீன் பிடிக்க சென்ற சுமார் 800 படகுகள் கரைக்கு திரும்பின. மேலும் அலையின் காரணமாக படகுகள் அடித்து செல்லாமல் இருக்க நங்கூரம் போடப்பட்டு உள்ளது. வழக்கமாக ஜனவரி மாதம் தான் மீன்பிடிக்க சிறந்த பருவ காலநிலையாக கருதப்படுகிறது. இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையினால் கரைக்கு திரும்பிய மீனவர்கள் தங்கள் தொழில் இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்