உ.பி. தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-03-02 09:38 GMT
லக்னோ,

உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 5 கட்ட தேர்தல் முடிந்தநிலையில், நாளை  6-வது கட்ட தேர்தல் நடக்கிறது. 

இந்த நிலையில் 7-வது கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இன்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

'ஆத்மநிர்பர் அபியானை' கேலி செய்யும் மக்கள், நமது (பாதுகாப்பு) படைகளை அவமதிக்கிறார்கள்-  இவர்களை போன்ற வாரிசு அரசியல் செய்பவர்கள் ஒருபோதும் இந்திய நாட்டை வலிமையாக்க முடியாது.  அவர்கள் தான் கொரோனா தடுப்பூசிகளை பற்றிய வதந்திகளை பரப்பியவர்கள்.

உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆபரேசன் கங்கா திட்டம் மூலம் மேற்கொண்டுள்ளோம். இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக 4 மத்திய மந்திரிகள் அங்கு சென்றுள்ளனர். இந்தியாவின் வலிமை காரணமாகவே உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை பத்திரமாக தாயகம் கொண்டு வர முடிந்தது. இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதில் எந்த ஒரு வழியையும் விட்டுவைக்க போவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்