உத்தரகாண்ட்; முதல்-மந்திரி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!!
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.;
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் மாநில தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்தில் இன்று பிற்பகலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏசியில் ஏற்பட்ட மின் இணைப்பு பிரச்சினையால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.