“நாட்டில் வெறுப்பூட்டும் பேச்சு சம்பவங்கள் அதிகரிப்பு” - சுப்ரீம் கோர்ட்டு கவலை

நாட்டில் வெறுப்பூட்டும் பேச்சு சம்வங்கள் அதிகரிப்பது கவலை அளிப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

Update: 2022-04-26 10:10 GMT
புதுடெல்லி,

டெல்லி ஹரித்துவாரில் நடைபெற்ற மாநாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது இமாச்சல பிரதேச விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். இதனை மறுத்த இமாச்சல பிரதேச தரப்பு வழக்கறிஞர், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதே போல் வெறுப்பூட்டும் பேச்சுகள் தொடர்பாக இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் தரப்பு வழக்கறிஞர் கூறினார். 

வெறுப்பூட்டும் பேச்சுக்களை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியும், நாட்டில் வெறுப்பூட்டும் பேச்சு சம்வங்கள் அதிகரிப்பது கவலை அளிப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் வெறுப்பூட்டும் பேச்சு தொர்பாக இந்த வாரத்தில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உத்தரகாண்ட் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்