ஜம்முவில் பேருந்து தீ பிடித்து விபத்து; 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

ஜம்முவில் வைஷ்ணவதேவி கோவிலுக்கு சென்ற பயணிகளின் பேருந்து தீ பிடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.;

Update:2022-05-13 19:52 IST
ஜம்மு,

ஜம்முவில் உள்ள பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சுமார் 25 க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து கத்ரா என்ற இடம் அருகே சென்ற போது  எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. 

இந்த கோர விபத்தில் 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  20- பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 வைஷ்ணோதேவி கோவிலுக்குச் செல்லும் புனித பயணிகளுக்கு கீழ் தளமாக கத்ரா உள்ளது.  பேருந்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்