டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா
டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை அனில் பைஜால் ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அனில் பைஜால் சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.