பாகுபலி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

அமெரிக்க நாட்டின் செயற்கைக்கோளை சுமந்தபடி பாகுபலி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.;

Update:2025-12-24 03:35 IST

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் , ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 யை விண்ணில் ஏவுகிறது.

இதில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட‘புளூபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது.

ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் ராக்கெட்டுக்கான இறுதி கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட்

இன்று (புதன்கிழமை) காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்.3- எம்.6 யை விண்ணில் ஏவுகிறது. இதில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.1 டன் எடை கொண்ட ‘புளுபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்