வடக்கு வங்காள பகுதிகளில் கனமழையால் தேயிலை உற்பத்தி கடும் பாதிப்பு! 30 சதவீதம் வரை உற்பத்தி குறைய வாய்ப்பு

வடக்கு வங்காள பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-13 14:28 GMT

சிலிகுரி,

மேற்கு வங்காள மாவட்டத்தில் வடக்கு வங்காள பகுதி மற்றும் தோவர் பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பருவகாலத்தில் 30-35 சதவீதம் வரை உத்தேசித்த உற்பத்தியை விட சரிவு ஏற்படும் என்று அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு வங்காள பகுதிகளில் உள்ள பெருமளவிலான டீ எஸ்டேட்டுகள் நிலச்சரிவு மற்றும் கனமழையால் சேதத்தை சந்தித்துள்ளன.

மேலும் அந்தப் பகுதிகளில் இதுவரை காணாத அளவுக்கு கனமழை பெய்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் ஆற்றங்கரைகளை ஒட்டி அமைந்துள்ளதால் மழை காலத்தில் ஆற்று நீர் தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து பயிரை நாசமாக்குகிறது.

இந்தியாவின் ஒட்டு மொத்த தேயிலை உற்பத்தியில், மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதியில் இருந்து 12 சதவீதம் வருகிறது என்று இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள தேயிலை உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்