அந்தமான், நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
போர்ட் பிளேர்,
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு தென்மேற்கே 183 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது காலை 7:15 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Earthquake of Magnitude:4.3, Occurred on 21-06-2022, 07:15:47 IST, Lat: 10.39 & Long: 91.61, Depth: 10 Km ,Location: 183km SW of Portblair, Andaman and Nicobar island, India for more information download the BhooKamp App https://t.co/LIt5XJIOs5 pic.twitter.com/Vo6IvjSJYr
— National Center for Seismology (@NCS_Earthquake) June 21, 2022