ஆந்திராவில் 492 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.;
Image Courtesy : ANI
அமராவதி,
அந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், கொடிகொண்டா சோதனைச் சாவடி வழியாக கண்டெய்னர் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சோதனையை தீவிரப்படுத்திய போலீசார், போதைப்பொருள் கடத்தி வந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. அந்த கண்டெய்னரில் 294 பைகளில் இருந்த சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 492 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.