சண்டிகரில் 52-வது ரோஜா மலர்கள் திருவிழா கோலாகலம்

பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கிய ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.;

Update:2024-02-25 22:11 IST

சண்டிகர்,

சண்டிகரில் உள்ள புகழ்பெற்ற ஜாகீர் ஹுசைன் ரோஜா பூங்காவில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் ரோஜா மலர்கள் திருவிழா நடைபெறுகிறது. அந்த வகையில் 52-வது ரோஜா மலர்கள் திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி(இன்று) வரை 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருவிழாவில் பல விதமான ரோஜா மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மலர்களைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அங்கே விதவிதமாக பூத்துக்குலுங்கிய வண்ண மலர்களை உற்சாகமாக கண்டுகளித்தனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்