குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்: மாரடைப்பு ஏற்பட்டு 12 வயது சிறுவன் உயிரிழப்பு

குஜராத்தில் 6-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-09-13 10:58 GMT

filepic

காந்திநகர்,

குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த 12 வயதான துஷ்யந்த் என்ற சிறுவன், அதிகாலை 5:30 மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுவனது பெற்றோர், அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

துஷ்யந்தின் திடீர் மரணத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராம மக்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிறுவன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினோம் என விஜாப்பூர் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார். கிராம மக்கள் அனைவரும் துஷ்யந்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்