பரபரப்பான சாலையில் திடீரென 20 அடி ஆழத்திற்கு உருவான பள்ளம் - அதிர்ந்த வாகன ஓட்டிகள்

உத்தரபிரதேசத்தில் கனமழையால் சாலையில் மிகப்பெரிய துண்டிப்பு ஏற்பட்டு, பாலம் சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2022-10-09 20:20 IST

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் கனமழையால் சாலையில் மிகப்பெரிய துண்டிப்பு ஏற்பட்டு, பாலம் சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள எக்ஸ்பிரஸ் அஸ்ட்ரா சாலை, இடைவிடாத மழையால் இடிந்து விழுந்தது. விபத்து ஏற்பட்ட பகுதியில், சாக்கடை, குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கனமழையால் 20 அடி ஆழத்திற்கு சாலை இடிந்து உள்வாங்கியது. கனமழையால் சாலையில் பள்ளம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

 

Tags:    

மேலும் செய்திகள்