காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் மனைவியை கொன்ற கணவர்
இரவில் சதீஷ்குமர் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கெளரிபிதனூர் தாலுகா நகரகெரே கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ் குமார். இவரும் நவ்யஸ்ரீ (19) என்ற இளம்பெண்ணும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். வாக்குவாதம் அதிகரித்ததால் சதீஷ்குமார் தனது மனைவி நவ்யாஸ்ரீயை ஒரு கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த நவ்யாஸ்ரீயை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் இரவில் சதீஷ்குமர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனால் அவரது மனைவி ஏன் தினமும் குடித்துவிட்டு தாமதமாக வீட்டிற்கு வருகிறீர்கள் என்று கேட்டார். இதனால் கணவர்-மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் அதிகரித்ததால் சதீஷ்குமார் தனது மனைவி நவ்யாஸ்ரீயை ஒரு கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த நவ்யாஸ்ரீயை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து கௌரி பிதனூர் போலீஸ் அதிகாரி அஞ்சன் குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் கௌரி பிதனூர் கிராமப்புற போலீசார் வழக்குப்பதிவு சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.