மராட்டியம்: சிலிண்டர் வெடித்து விபத்து - 5 பேர் படுகாயம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2026-01-21 02:26 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் நவனீத்நகர் பகுதியை சேர்ந்தவர் கீட்டன் டெல்கியா (வயது 35). இவர் திங்கட்கிழமை இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டில் சமையல் செய்வதற்கு கியாஸ் அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் அருகே உள்ள வீடுகளின் ஜன்னல், கண்ணாடியும் உடைந்தது. இதில் கீட்டன் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்