கார்கிலில் வயலில் கிடந்த வெடிகுண்டு வெடித்து சிறுவன் சாவு..!

கார்கிலில் வயலில் கிடந்த வெடிகுண்டு வெடித்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2023-04-16 22:12 GMT

ஸ்ரீநகர்,

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட கர்பதங் என்ற பகுதியில் நேற்று சில சிறுவர்கள் வயல்வெளியில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கே கிடந்த பழமையான வெடிகுண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் 13 வயது சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் கார்கிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கிலில் போர் நடந்தது. அந்த போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு வெடிக்காமல் கிடந்து, தற்போது வெடித்துள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே சம்பவ பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் இதைப்போன்ற வெடிகுண்டுகள் மற்றும் தளவாடங்கள் வேறு ஏதேனும உள்ளனவா? என்று ஆய்வு செய்யப்படும் என லடாக் துணைநிலை கவர்னர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்