பெங்களூரு விமான நிலையத்தில் 'எல்வெட்டர்'க்கு தவறான அர்த்தத்தில் கன்னட வார்த்தை

பெங்களூரு விமான நிலையத்தில் ‘எல்வெட்டர்’க்கு தவறான அர்த்தத்தில் கன்னட வார்த்தை இடம்பெற்றுள்ளது.

Update: 2022-12-14 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் உள்ள லிப்ட்டின் அருகே ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஆங்கிலத்தில் 'எல்வெட்டர்' என்று சரியாக எழுதப்பட்டு உள்ளது. ஆனால் கன்னடத்தில் 'யெரிலி தேரு' என்று தவறாக எழுதப்பட்டு உள்ளது.

இந்த தவறை சுகதா சீனிவாசராஜூ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சுட்டுக்காட்டியுள்ளார். 'யெரிலி தேரு' என்று எழுதப்பட்டு உள்ளது. 'தேர் எப்போது ஏறி, இறங்கியது. தேர் முன், பின் நோக்கி தான் நகரும்'. தவறான அர்த்தத்தை எழுதுவதற்கு பதிலாக 'லிப்ட்' என்றே கன்னடத்தில் எழுதி இருக்கலாம். எதற்காக கற்பனையான, துல்லியமற்ற வார்த்தையை எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து லைக்குடன் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்