டெல்லியில் வெள்ளத்துக்கு காரணம் ஆம் ஆத்மி அரசின் பொறுப்பற்றத்தன்மையே காரணம் - பாஜக குற்றச்சாட்டு

டெல்லி வெள்ளத்துக்கு ஆம் ஆத்மி அரசின் ஊழலும், பொறுப்பற்றத் தனமுமே காரணம் என பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

Update: 2023-07-16 15:35 GMT

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தலைநகரின் பல இடங்களும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்ததால் டெல்லியில் யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. யமுனை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுக்கு காரணம் பாஜகவின் சதிச் செயல் என ஆம் ஆத்மி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், யமுனை நதி, கால்வாய்களில் தூர்வாரும் பணியை டெல்லி அரசு சரிவர செய்யாதது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய டெல்லியின் பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது:

யமுனை நதி மற்றும் டெல்லியின் கால்வாய்களை தூர்வாரும் பணியினை ஆம் ஆத்மி தலைமையிலான அரசு சரிவர செய்யவில்லை. ஆம் ஆத்மி அரசே டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு காரணம். யமுனை நதி மற்றும் கால்வாய்கள் தூர்வாரியது குறித்து ஆம் ஆத்மி அரசு மீது விசாரணை செய்ய நாங்கள் வலியுறுத்துகிறோம். தூர்வாரும் பணிகளை ஆம் ஆத்மி தலைமையிலான செய்ததென்றால் அந்தப் பணிகளுக்காக எவ்வளவு பணம் செலவு செய்தது.

டெல்லி வெள்ளத்துக்கு ஆம் ஆத்மி அரசின் ஊழலும், பொறுப்பற்றத் தனமுமே காரணம். கடந்த 2 ஆண்டுகளாக டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையிலான வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் நடைபெறவில்லை. வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ளத் தவறிய ஆம் ஆத்மி தனது இயலாமையை மறைக்க பாஜகவை குறை கூறுகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்