உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.;

Update:2022-12-29 03:57 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 23 வயது இளம்பெண் ஒருவர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல வாடகை டாக்சியில் ஏறினார். யமுனா விரைவுச்சாலை நோக்கி டாக்சி சென்றபோது இளம்பெண்ணை தவிர மற்ற பயணிகள் அனைவரையும் டாக்சி டிரைவர் குபேர்பூரில் இறக்கிவிட்டார். தனியாக இருந்த இளம்பெண்ணை எட்மத்பூரில் இறக்கிவிடுவதாக கூறினார்.

பின்னர் தனது 2 நண்பர்களை போனில் டிரைவர் வரவழைத்தார். அந்த 3 பேரும் சேர்ந்து அப்பெண்ணை அருகில் உள்ள வயல்வெளிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடினர். அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு போனில் கூறினார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுதொடர்பாக டாக்சி டிரைவர் ஜெய்வீர் மற்றும் அவரது நண்பர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்