அதிமுக வழக்கு: பதவியை குறுக்கு வழியில் பெற இபிஎஸ் முயற்சி; ஓபிஎஸ் தரப்பு வாதம்; நாளை விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்றும் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-05 11:09 GMT

புதுடெல்லி,

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ந் தேதிக்கு (நேற்று) தள்ளிவைக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை இன்று தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் பரபரப்பு வதங்கள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாகஅதிமுகவின் அடிப்படை விதிகளையே

தற்போது மாற்றி அமைத்துள்ளனர். கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியையும் மாற்றியுள்ளனர். பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும்" போன்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கின் விசாரணையை நாளைக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. இரு தரப்பினரும் நாளை வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்