அனைத்து சமூகங்களும் சமமான வளர்ச்சி பெற வேண்டும்; உயர்கல்வி மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு

அனைத்து சமூகங்களும் சமமான வளர்ச்சி பெற வேண்டும் என்று உயர்கல்வி மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-20 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக ஆர்யவைசிய மகாசபா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்துகொண்டு பேசியதாவது:-

உலகமயமாக்கல் நடைபெற்று வரும் நிலையில் உயர்கல்வி படிப்பவர்கள் மட்டுமே நல்ல வாய்ப்புகளை பெறுகிறார்கள். இந்த போட்டி உலகில் தரமான கல்வியை பயில்பவர்கள் உண்மையான சக்திகளாக மாறுகிறார்கள். சமுதாயத்தில் அனைத்து சமூகங்களும் சமமான வளர்ச்சி பெற வேண்டும். இதற்காக பிரதமர் மோடி புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளார்.

இந்த கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. மேலும் பிரதமர் மோடி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதி செய்துள்ளது.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்