முதல்-மந்திரி பதவிக்காக பொது கிணற்றை பா.ஜனதா எம்.எல்.ஏ. மூடினாரா?; போலீசில் காங்கிரஸ் புகார்

முதல்-மந்திரிக்காக பொது கிணற்றை பா.ஜனதா எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லத் மூடியதாக காங்கிரசார் புகார் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-06 21:02 GMT

பெங்களூரு:

உப்பள்ளி-தார்வார் மேற்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அரவிந்த் பெல்லத். மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பாவை மாற்றிவிட்டு புதியவரை முதல்-மந்திரியாக நியமிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருந்தது. அப்போது அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ.வுக்கு தான் முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்ற தகவல்கள் பரவியது.

அவரும் முதல்-மந்திரி பதவிக்காக டெல்லிக்கு பலமுறை சென்று கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வந்தார். ஆனால் அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கவில்லை. இந்த நிலையில், அரவிந்த் பெல்லத் வீட்டின் அருகே இருந்த பொது கிணறு மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து, கிணற்றை காணவில்லை எனக்கூறி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாகராஜ் கவுரி, தார்வார் புறநகர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

பொது கிணறை பா.ஜனதா எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லத் தான் மூடியதாகவும் அவர் குற்றச்சாட்டு கூறி இருந்தார். அதே நேரத்தில் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்யாவிட்டால், லோக் அயுக்தா போலீசில் புகார் அளிக்க போவதாகவும் நாகராஜ் கவுரி கூறி இருந்தார். இந்த நிலையில், அரவிந்த் பெல்லத்திற்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்றால், வீட்டின் அருகே உள்ள பொது கிணறை மூடும்படி ஒரு ஜோதிடர் கூறியதாகவும், அதனால் அவர் கிணறை மூடி இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்