மசூதியை நோக்கி அம்பு எய்வது போல பாவனை: பா.ஜனதா வேட்பாளர் செயலால் சர்ச்சை

ஐதரபாத் பா.ஜனதா வேட்பாளரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

Update: 2024-04-18 15:23 GMT

ஐதரபாத்

ஐதராபாத்தில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுபவர் மாதவி லதா. தெலுங்கானாவில் வரும் மே 13 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், ஐதரபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் பா.ஜனதா வேட்பாளர் பங்கேற்றார். அப்போது மசூதி ஒன்றின் அருகே வந்த போது,

கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல பாவனை செய்த மாதவி லதா அதனை தொலைவிலிருக்கும் இலக்கு நோக்கி எய்வது போல காட்டினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து, ஐதராபாத்தின் பா.ஜனதா வேட்பாளருக்கு எதிராக கண்டனங்கள் குவித்தன.

இதனையடுத்து, இந்த செய்கை மற்றும் வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, மன்னிப்பும் கோரியிருக்கிறார். "அது முழுமை பெறாத வீடியோ ஒன்றின் சிறு பகுதி மட்டுமே. அந்த வகையில் தவறாக பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. அனைத்து தரப்பினரையும் நான் மதிக்கிறேன். எனினும் எவருடைய உணர்வுகளையேனும் எனது செய்கை புண்படுத்தியிருப்பின் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்" என்று விளக்கி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்