பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா கொண்டாட்டம்

குட்டேக்கல் பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-07-23 14:44 GMT

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் குட்டேக்கல் பகுதியில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணிய சாமி கோவில். ஆண்டுதோறும் இந்த கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடி கிருத்திகை திருவிழா கொண்டாடப்படவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடிகிருத்திகையை வெகுவிமரிசையாக கொண்டாடவேண்டும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் பரணி காவடி நிகழ்ச்சி நடந்தது. நேற்று ஆடி கிருத்திகை திருவிழா கொண்டாடப்பட்டது.

இதை யொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது பக்தர்கள் பலர் காவடி எடுத்து, வேல் அலகு குத்தி இறைவனுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த ஆடி கிருத்திகை விழாவில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி, சிகாரிப்புரா மற்றும் தாவணகெரே, தீர்த்தஹள்ளி, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்த ஆடி கிருத்திகை விழாவை ஒட்டி கோவிலில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சிவமொக்கா போலீசார் தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்