5-ந் தேதி இந்தியா வரும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இம்மாதம் 5-ந் தேதி இந்தியா வர உள்ளார்.;
Image Courtacy: PTI
புதுடெல்லி,
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இம்மாதம் 5-ந்தேதி இந்தியாவுக்கு வருகிறார். ஒட்டுமொத்த இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் அவரது பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை ஷேக் ஹசீனா சந்திக்கிறார். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.