கேரளாவை உலுக்கிய படகு விபத்து; கை விலங்குடன் காவலில் இருக்கும் படகு உரிமையாளர்

தலைமறைவாக இருந்த படகின் உரிமையாளர் நாசர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-09 09:36 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள், முதியவர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமர் மோடி அறிவித்தார். கேரளாவை உலுக்கிய இந்த விபத்துக்கு அதிகப்படியான பயணிகளை படகில் ஏற்றி சென்றதே காரணம் என்பதும், மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றி அமைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே தலைமறைவாக இருந்த படகின் உரிமையாளர் நாசர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நாசர், கை விலங்குடன் போலீஸ் காவலில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்